Monday, 3 January 2011

"ஒன்னும் விளங்கலைங்க"...



அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய வலைப்பூ உள்ளங்களுக்கு தமிழ்க்காதலனின் வணக்கங்கள்.

எனக்கு சில விசயங்களில் சந்தேகங்களும், சில விசயங்கள் சுத்தமா புரியாததாகவும் இருக்குங்க... உங்களில் யாருக்காவது இதுல (சரியான) பதில் தெரிஞ்சா தயவுசெய்து எனக்கு பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்...

முதலில் புரியாத விசயங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுக்க "இறையாண்மை" அப்படின்னு ஒரு வார்த்தை அடிபடுதுங்க.... அப்படின்னா என்னாங்க..? அதிலும் குறிப்பா "இந்திய இறையாண்மை" அப்படின்னா என்னங்க...?

நம்ம நாட்டுல அடிக்கடி "கொள்கை" பற்றிய பிரச்சாரங்கள் நடக்குது... "கொள்கை" அப்படின்னா என்னங்க..? அதிலும் குறிப்பா "அரசியல் கட்சிகளின் கொள்கை" சுத்தமா விளங்கலங்க... தெரிஞ்சா சொல்லுங்க.... நானும் இதுக்காக சில பொதுக்கூட்டத்துல கூட கலந்துகிட்டுப் பார்த்துட்டேன்.... யாரும் அதைப் பத்தி பேசலைங்க.... உங்களுக்கு ஏதாவது புடிபடுதான்னு பாருங்க...

"இரகசியகாப்பு உறுதிமொழி" அப்படின்னா என்னங்க....? இத எதுக்கு அரசியல்வாதிங்க எடுக்குறாங்க....? இரகசிய கோப்புகளை கடத்துவதாங்க...? இல்லை திருடுவதாங்க....? விளங்கையில்ல....

"இராணுவ இரகசியம்" அப்படின்னா என்னங்க....? நம்மகிட்ட என்னென்ன ஆயுதம் இருக்குன்னு நம்மோட எதிரிக்கு உளவு சொல்றதாங்க... புரியல்ல.... புரிஞ்சா சொல்லுங்கோ....

நம்ம நாட்டுல அரசியல் சாசன சட்டப்படி "அதிக அதிகாரம்" யாருக்குங்க இருக்கு ....? சமீபத்திய பிரணாப் முகர்சியோட பேட்டிகளைப் பார்த்து நான் படிச்சதெல்லாம் மறந்து போச்சுங்க... நீங்க சொல்லுங்க...

"இலஞ்சம், ஊழல், திருட்டு" இது மூணுக்கும் என்னங்க வித்தியாசம்....? செயலைப் பொறுத்து பொருள் கொள்வதா..? இல்லை செய்யும் ஆளைப பொறுத்து பொருள் கொள்வதா..? புரியலைங்க.....

சின்ன வழக்கானாலும், பெரிய வழக்கானாலும் எல்லாத்துக்கும் நம்ம நீதிமன்றங்கள் "காலம் கடந்த தீர்ப்பு" வழங்கும்.... இரகசியம் என்ன...? வரப்பு தகராறுன்னு வந்தவங்க "வயலே இல்லாம போற" நிலைமை என்ன நியாமுங்க....?

இந்த வக்கீல்... மருத்துவர்களுக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை சேவைக் கட்டணமா ஏன் சரியா தீர்மானிக்காமல் வச்சிருக்காங்க... (புடுங்கறதுக்கு வசதியாவா...) நாடு முழுக்க ஒரு சமச்சீரான கட்டணத்தை தீர்மானிக்கலாமே...

படிப்பறிவில்லாதவங்ககிட்டையும்... அறியாமை நிறைந்த அப்பாவிகளிடமும் கொள்ளை அடிக்க எதுக்குங்க கல்வி..கற்க வேண்டும்..? கல்வி என்பது "நாகரிகமாய் திருடுவதன் சாகசப் பயிற்சியாங்க"... இந்த நாடு முழுக்க படிச்சவன் பண்ற லொள்ளுத் தாங்க முடியலைங்க.....

நாகரிகமில்லா நடத்தையுள்ளவன் எப்படி கல்வியாளன் ஆகிறான்...?

சட்டப்படி இரண்டாம் திருமணம் குற்றமா...? இல்லை... முதல் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் இரண்டாம் திருமணம் செய்வது குற்றமா...? சம்மதத்துடன் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாமா...?


இந்து எனப் பிறப்பு சான்றிதழ் பெற்ற ஒருவன் ஒரு முகமதிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் அவன் சட்டப்படி முகமதியனாகிறான் என்றால்.... முகமதிய சட்டப்படி அவன் எத்தனை திருமணம் செய்தாலும் சட்டம் அதை சரி என்கிற போது.... அல்லது அவர்கள் மதப்படி "தலாக்" சொல்லி பிரிந்தால் அது "திருமணரத்து" என சட்டம் ஏற்றுக்கொள்கிறபோது.... இரண்டாவது திருமணம் தவறு அல்லது குற்றம் என்கிற சட்டம் செத்துப் போகும் மர்மம் என்ன....?

ஒருவனுடைய மனைவிக்குப்பின், அவனுடைய வாரிசுகளுக்குப் பின், அவனுடைய "வைப்பாட்டி" யாக இருப்பவருக்கு சொத்தில் உரிமை கொண்டாட உரிமை வழங்கும் இந்திய சட்டம் ஏன் அந்த வைப்பாட்டிகளின் வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரம் அளிப்பதில்லை..? உங்களுக்கு விளங்குதாங்க.....

ஒரு "நாடு" என்பதன் பொருள் என்ன...? எதை நாம் "நாடு" எனக் கொள்ளலாம்...? வரையறுக்க முடிந்தால் சொல்லுங்கள்...

"சுயாட்சி" என்பது என்ன...? சுதந்திரம் என்பது என்ன...? நேற்றைய ஆங்கிலேய பிரபுத்துவ ஆட்சி முறைக்கும்... இன்றைய இந்திய மத்திய, மாநில ஆட்சி முறைக்கும் என்னங்க வித்தியாசம்...? இரண்டும் ஒன்னுதான்னா நாம சுதந்திரம் பெற்றது.... உண்மையா..? பொய்யா...?

சரிங்க..... விளங்காத விசயங்கள் நீளுவதால்..... உள்ளுக்குள் ஒரு போர் மூளுவதால்.... இப்போதைக்கு இதை நிறுத்துகிறேன்...... சந்தேகங்களை நாளை பார்ப்போம்...




என்னங்க
மறக்காம கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க...

பதிலுக்காய் காத்திருக்கும்
-தமிழ்க்காதலன்.

7 comments:

karthikkumar said...

""ஒன்னும் விளங்கலைங்க"...///
எனக்கும்தாங்க...

karthikkumar said...

உலகம் முழுக்க "இறையாண்மை" அப்படின்னு ஒரு வார்த்தை அடிபடுதுங்க.... அப்படின்னா என்னாங்க..? அதிலும் குறிப்பா "இந்திய இறையாண்மை" அப்படின்னா என்னங்க...?///
இது என்ன புது வார்த்தையா இருக்கு...

Philosophy Prabhakaran said...

இதுக்கு நீங்க எங்களை கேட்ட வார்த்தைல திட்டியிருக்கலாம் :))) அவ்வ்வ்வ்... முடியல...

எஸ்.கே said...

நிறைய வார்த்தைகள்! ஆனா வெறும் கேள்விகள்தான் இருக்கு! பதில்?????

உங்களைப் போலவே அந்த வார்த்தைகளை நானும் அந்த வார்த்தைகளை கேள்விபட்ட போது புரியாமல்தான் இருக்கிறேன்!

எஸ்.கே said...

நான் மொழிபெயர்க்கும்போது சில ஆங்கில வார்த்தைகள் புதிதாக இருக்க அவ்ற்றுக்கான தமிழ் வார்த்தை தேடினால் இப்படி புதிதாக ஏதாவது வார்த்தை கிடைக்கும். குழம்பினாலும் நாமாக ஏதாவது அர்த்தம் ஏற்படுத்திக் கொள்வோம், முழுமையான பொருளை யார் விளங்க வைப்பார்?

செல்வா said...

இவ்ளோ கேள்வி இருக்கா ..?

மாணவன் said...

யாராவது பதில் சொல்வாங்கன்னு பார்த்தா ஒருத்தருக்கும் தெரியலேயே?? ம்ம்

பாஸ் யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க..... :)))