
இதில் அவர்கள் கட்சியின் "உள்குத்துகள்" பற்றி பல விசயங்கள் பேசப்பட்டன. நிறைய சோகக் கதைகள், அழுகைகள், புலம்பல்கள்..... ஆனால் எல்லோரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாய் பேசினார்கள்... என்ன விஷயம் என்கிறீர்களா....? சொல்கிறேன்.
"அனைத்து மாவட்ட, வட்ட, ஊராட்சி, தலைவர்களும் அவர்களுக்கு மேலிருக்கும் தலைவர்களை வெளிப்படையாய் குறை சொல்லி அழுததும்.., மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர்களை குறை சொல்லிப் புலம்பியதும் ஏகோபித்த காட்சியாய் காண முடிந்தது".
அவர்களின் குறை என்ன தெரியுமா..? நாங்கள் சம்பாதிக்க முடியவில்லை. நாலு காசுப் பார்க்க முடியவில்லை. இப்போ காசுப் பார்த்தாதானே உண்டு.... எங்க பொழப்பில் அமைச்சர் மண்ணை அள்ளிப் போட்டுட்டார் அமைச்சர். அவங்க சொந்தக்காரங்களுக்கு மட்டும்தான் காண்ட்ராக்ட் குடுக்குறார். கட்சிக் காரங்களுக்கு குடுக்க மாட்டேங்குறார். எல்லோரும் வெறுப்பா இருக்காங்க. இப்படி இருந்தா அடுத்த தேர்தல்ல அவங்க ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க.
இப்படிதாங்க ஒவ்வொரு கூட்ட சந்திப்பிலும் முதல்வர், ஸ்டாலின் உட்பட அத்தனை பேரின் முன்னிலையில் உட்கட்சிப் பூசல்கள் அலசப்பட்டன. ஒரு கட்சி எப்படி மக்களுக்கு தொண்டு செய்யலாம்... மக்களின் உண்மையானப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்.? நம்முடைய திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேருகிறது..? மக்களுக்கு அதில் திருப்தியா..? என்பது போன்ற எந்த விசயங்களும் அலசப் படவில்லை.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால்.... முதல்வரும்.... இதை ரசித்தப் படி ஒட்டு மொத்தமாய் ஒரே பதிலை சொல்லி இருக்கிறார். அது பின் வருமாறு.
"நீங்கள் எல்லோரும் இப்படி சண்டைப் போட்டுக்கொண்டும், தனித் தனியாக செயல்பட்டுக் கொண்டும் இருந்தால் நாம் தேர்தலில் எப்படி வெற்றிப் பெறுவது..? நீங்கள் முதலில் ஒன்று படுங்கள்... உங்களில் இருக்கும் பகைமை உணர்ச்சிகள் மறந்து ஒற்றுமையாய் தேர்தல் வேலையை தொடங்குங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.... மக்கள் தி.மு.க வுக்கு வாக்களிப்பார்கள்... நீங்கள் அதைக் கெடுத்துவிடாதீர்கள்.
இந்த தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றாலும், தோற்றாலும் எனக்கு ஒன்றும் பாதிப்பு வந்து விடாது. ஆனால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.... உங்களின் உழைப்பை பொறுத்து நமது வெற்றி அமையும். எனவே ஒன்று பட்டு வெற்றிப் பெறுவோம். உங்களின் இந்த சின்ன சின்ன குறைகளை எல்லாம் சரி செய்து விடலாம். சென்று வாருங்கள்".
இதுதாங்க நம்ம முதல்வரோட வழிகாட்டுதல்.... அறிவுரை... எல்லாம்.
ஒட்டு மொத்த கட்சியும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதில் குறியாய் இருப்பதை பார்த்தால் இந்திய இருப்பு பெட்டியை காலி செய்தாலும் இவர்களின் ஆசை அடங்காது போல் தெரிகிறது. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காத காட்சிகளில் தி.மு.க முதலிடத்தில் இருக்கிறது. கேட்டால்... நானே இன்னும் இளைஞனாகத்தான் இருக்கிறேன் என்கிறார் முதல்வர்... அப்படி அவரை இளைஞராக வைத்திருப்பது அன்பழக இளைஞர் என்கிறார். ஸ்டாலின் இன்னும் இளைஞராக இருக்கிறார். எனக்கு ஒன்னு விளங்கலைங்க...
இவங்களை இளைஞர்கள் என்று வைத்துக் கொண்டால்......
நம்மை எந்தப் பருவத்தில் வைப்பது எனத் தெரியலங்க...? உங்களுக்கு விளங்குதா..?
நான் எல்லாம் பால் குடிக்கும் குழந்தைங்க...? நம்ம தினேஷ் குமார், மனசு குமார், வினோத் நிலா இவங்களும் பால் குடிக்கும் குழந்தைகள்.., அல்லது தத்தி தவழும் கைக்குழந்தைகள் எனக் கொள்ளலாமா...?
வலைப்பூவில் வாழும் அன்பு சொந்தங்கள் எல்லாம் குழந்தைப் பருவம் தாண்டா குழந்தைகள். வலைப்பூவில் குழந்தைகள் எழுதுகின்றன. தமிழகத்தில் தாத்தாக்களே கிடையாது. பாட்டிகள் இல்லவே இல்லை. எல்லாம் அக்காக்களோடு சரி....
இது ஆரோக்கியமான சமூகமா..? இதற்கு மாற்றுக் கிடையாதா...? அரிதாரம் பூசாத அரசியல் வாதிகள் நம்மில் உருவாகாதது ஏன்..? அல்லது உருவாக்கப் படாதது ஏன்..?


இந்த தேர்தலுக்கு ஓட்டுப் போட வரமாட்டேன்னு சிரிக்கறாங்க சித்ராக்கா.., அட அங்க யாரு... கே.ஆர்.பி செந்தில் உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்காராம்... மணிஜிய கூப்பிட்டு அவரோட உண்ணாவிரதம் முடிக்க சொல்லுங்கப்பா...
இதுக்கே இப்படின்னா இன்னும் இருக்கே.... என்ன பண்ண போறீங்க...?
அடுத்த முறை அதிர்ச்சித் தகவல்களோட உங்களை சந்திக்கிறேன்....
மீளாத அதிர்ச்சியுடன்.....
-தமிழ்க்காதலன்.

7 comments:
ஆஹா.... சிரிக்க முடியலை நண்பா.... கவிதைகளை கட்டவிழ்த்து விடும் நீங்கள் சிறப்பான பகிர்வை வெளியிட்டிருக்கிறீர்கள்...
எல்லாரையும் கலாய்ச்சாச்சு போல...
நடக்கட்டும் நடக்கட்டும...
///கட்சிக் காரங்களுக்கு குடுக்க மாட்டேங்குறார்.எல்லோரும் வெறுப்பா இருக்காங்க. இப்படி இருந்தா அடுத்த தேர்தல்லஅவங்க ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க.///
நல்ல மீட்டிங் போலேயே ..?
இத்தன பேரா ..?
தோழரே நகைச்சுவை கலந்து பகிர்ந்துள்ளீர்கள் நன்று...
நம்மை சிந்திக்க வைத்துள்ளார் தமிழ்காதலன் நண்பர்களே என்ன இன்னும் கொடிபிடிக்கத்தான் ஆசையா இளையச்சமுதாயமே சிந்தியுங்கள் எங்கே செல்கிறோம் நாம் ? எங்கள் குரல் ஒருகை ஓசையாக மாறாமல் கரம்கோர்த்து பயணிப்போம் வாருங்கள்
மாற்றங்கள் வேண்டும் தல.... கொஞ்சம் கொஞ்சமாக இளைய தலைமுறை மாறும்...
அடுத்த முறை அதிர்ச்சித் தகவல்களோட உங்களை சந்திக்கிறேன்....
.....இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. தெளிய வச்சு - தெளிய வச்சு - அடிக்கிறாங்கப்பா.....!! மி த பாவம்!
உங்களிடமிருந்து இப்படி ஒரு வித்தியாசமான பதிவு... ஆச்சர்யப்படுத்துகிறது... ஆனால் கலக்கல்...
Post a Comment