1. பெய்யுங்கால் பொங்காது பொறுத்துப் பின்
காயுங்கால் பொங்கும் நிலம்.
2. பூக்காத பருவத்து பூக்கும் மலரின்
மடி காய்ந்து மலடாகும்.
3. கார்த்திகை கதிரும் மார்கழி மாரியும்
குடியானவன் குடி கெடுக்கும்.
4. வட்டிக்கு கடன் கழியும் கழியாத
அசல் உடனிருந்து உறுத்தும்.
5. குடிக்கும் நீரும் தினம் படுக்கும்
பாயும் பரிசுத்தம் பார்.
6. தையலை நோக்கா நயனம் காக்கும்
மானம் நோக்கப் போகும்.
7. வலைய விழும் கையாள் வாங்கி பசலை
பரிசோதிக்க வேண்டாம் பார்.
8. புலரும் பொழுதுகளில் புணர்ச்சியும் நித்திய
கடமையாம் கூவும் சேவலுக்கு.
9. கத்துங்கிளி காட்டும் கனிந்த கனி
கொத்தும் கனிச் சிதறல்.
10. பழக்கமிலா காளையும் புழக்கமிலா பணமும்
உபயோகத்துக்கு உதவாது போகும்.
அன்புடன்.......
தமிழ்க்காதலன்.
***************************************************
6 comments:
அருமை.
கவிஞரே அசத்தல்...
அரிதாராம் பூசா அவதாரம் படைக்க வேள்விகள் தொடரட்டும் தோழரே
இது என்ன ஒஉது அதிகாரம் நண்பரே... எட்டாவது குரல் காமத்துப்பால் போல இருக்கு...
சூப்பரா இருக்கு
அருமை கவிஞரே.
தொடரட்டும் தோழரே.
Post a Comment