கழனியிலே களையெடுக்கும்
கன்னியரின் கலகலப்பில்
குயில் பாட மறந்ததுவே - எம்
கன்னியரின் பாடலிலே
பாட்டொன்று பறந்து வரும்
பட்டாடை கட்டிக்கிட்டு
பக்கவாத்தியம் ஏதுமில்ல
படையாலும் மன்னன் கூட
எனையாளும் தமிழ் மலர
பாலகனாய் மாறிடுவான்....!
அந்திசாயும் மாலையிலும்
சும்மாடு தலையில் வைத்து
அடுப்பெரிக்க விறகு சுமந்து
வீதியிலும் நடக்கையிலே
விட்டில் பூச்சி வெளிச்சத்திலே
வீடு வந்து சேர்ந்திடுவா
வீட்டில் சோறு பொங்கிடுவா
விளையாட்டாய் படித்த பாட்டில்
ஊரெல்லாம் தூங்க வைப்பாள்
உணர்வுள்ள தமிழச்சியாய்...!!
7 comments:
தெம்மாங்கு பாடி , உற்சாகத்துடன் அடி எடுத்து வைத்து இருக்கும் உங்கள் மூவருக்கும் - மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
இதுலயும் கவிதையா பங்கு. கலக்குங்க கவிதை அருமை.வோர்ட் வெரிபிகேசனை எடுத்துடுங்க:)
இது அழகா இருக்கு ... வாழ்த்துக்கள் ..
வாழ்க தமிழும் அதனை காப்பவனும்...
அருமையான வரிகள் தினேஷ்..
வணக்கம் நண்பர்களே தமிழ் செழிக்க கரம் கோர்க்கிறோம் தங்கள் ஆதரவும் ஊக்கமும் தான் எங்களுக்கு வெற்றி பாதை தொடர்ந்து தோள் கொடுங்கள் நண்பர்களே வளர்ந்து காட்டுகிறோம் தனிமரமாக அல்லாமல் பெருந்தோப்பாக......... அன்புடன்
தினேஷ்குமார்
Post a Comment